''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது. திருச்சியில் மே 20 உயர்மட்டக்குழு கூடி போராட்ட முடிவுகளை அறிவிக்கும்,''
என, மதுரையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 21 மாத நிலுவை தொகை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊழியர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிநடப்பதாக கூறும் தமிழக அரசு அவர் சட்டசபையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றவில்லை.
அரசின் துறைகளில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே வேளையில் படித்து அரசு வேலை வாய்ப்புக்காக 80 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களை தேர்வாணையம் மூலம் காலியிடங்களில் நியமிப்பதற்கு பதில் அவுட்சோர்சிங் மூலம் ஊழியர்களை நியமிக்க அரசு முயற்சிக்கிறது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச வேண்டும். தவறினால் திருச்சியில் மே 20 உயர்மட்ட குழு கூடி போராட்டத்தை முடிவு செய்யப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக