''ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான கோப்புகளை, ஒரு நபர் குழுவிற்கு, அரசு அனுப்பி உள்ளது,'' என, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில், நேற்று அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசிய பின், அவர் அளித்த பேட்டி:ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, ஆசிரியர்கள் அனைவரும், ஏப்., 23 முதல், 26 வரை, உண்ணாவிரதம் இருந்தோம். உண்ணாவிரதத்தின் நான்காம் நாள், அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, கல்வித்துறை சார்பில், 'ஊதிய முரண் பாடுகள் குறித்த கோப்புகளை, ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கிறோம். முரண்பாடுகளை களைய முற்படுகிறோம்' என, உத்தர வாதம் அளிக்கப்பட்டது.
கல்வித்துறை அமைச்சரும் உத்தரவாதம் அளித்ததால், போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.அரசு கூறியபடி, எங்களுடைய கோப்புகளை, ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி, அதற்கான நகலை அளித்து உள்ளனர். அரசு கூறியதை நிறைவேற்றி உள்ளது.
ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற நம்பிக்கையில், போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தோம். அவரும் முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக