லேபிள்கள்

12.5.18

மல்லுக்கட்டும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் : ஆன்லைனில் விவரம் 'மிஸ்சிங்'

தமிழகத்தில் குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ்25 சதவிகிதம் மாணவர் சேர்க்கையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் விவரம் இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தாண்டு முதல் மெட்ரிக் பள்ளிகளுடன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நுழைவு வகுப்புகளில் ஆர்.டி.இ.,யின் கீழ் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இம்மாதம் 18 வரை நடக்கிறது. ஆனால் பதிவின்போது சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் விவரம் இடம் பெறாததால் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.ஆனால் 'குறிப்பிட்ட சிலருக்கு சில பள்ளிகளில் நேரடி விண்ணப்பம் வழங்கப்படுகிறது, எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று சி.பி.எஸ்.சி., பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்,' என பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் ஆர்.டி.இ., பதிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை ஆர்.டி.இ., சேர்க்கை கீழ் கொண்டு வர, தமிழக கல்வி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அதற்கான உத்தரவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வழங்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவருக்கான கல்வி கட்டண தொகையை பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் என்றாலும் அதை சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நம்ப முன்வரவில்லை. மேலும் கல்வித்துறை அதிகாரிகளை அப்பள்ளிகள் மதிக்கவில்லை. எந்த தகவலும் அளிப்பதில்லை, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக