லேபிள்கள்

9.10.13

திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி

திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 122 ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


முதுகலை ஆசிரியர்கள்2,645 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3,900 பேர் எனதமிழகம் முழுவதும் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவித்தது.முதுகலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக 5,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கவும், அதற்காக 20.18 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. பணியிடங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களேநிரப்பவும், அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. முதன்மை கல்விஅலுவலர் ஆனந்தி கூறுகையில், "" பட்டதாரி ஆசிரியர்கள் 87, முதுகலை ஆசிரியர்கள் 35 என 122 ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன;பி.எட்., முடித்தவர்கள், அருகில் உள்ள பள்ளிக்கு சென்று, இப்பணியில் சேரலாம்,'' என்றார். திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர்கள் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. முதுகலை ஆசிரியருக்கு ரூ.5 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.4 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக