லேபிள்கள்

7.10.13

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாகநிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக்கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப்பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.


இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. பதவிஉயர்வைப் பொருத்த வரையில், 40 சதவீத இடங்களை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 35 சதவீத இடங்களை அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும்நிரப்புகிறார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித் தேர்வுநடத்தும். காலி பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம், கணிதம்,இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடத்துக்கும்இடங்கள் ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைபடிப்பும், பி.எட். பட்டமும் பெற்றிருப்பவர்கள் டி... நேரடித்தேர்வுஎழுதலாம்.

முன்பு நேரடித் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து முதுகலைபட்டப் படிப்பு தகுதியில் ஆப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில்கேள்விகள் கேட்கப்படும். அண்மையில், டி.என்.பி.எஸ்.சி.ஒட்டுமொத்தமாக குருப்-1, குரூப்-2, குரூப்-4 என அனைத்துதேர்வுகளையும் மாற்றியமைத்தது. அதில் டி... தேர்வும்மாற்றத்துக்குள்ளானது.

புதிய தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது அறிவு சம்பந்தப்பட்டகேள்விகள் கொண்ட முதல்நிலைத் தேர்வு, அடுத்த கட்ட தேர்வானமெயின் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். பொது அறிவு சம்பந்தப்பட்ட 2தாள்களும் விரிவான முறையில் பதில் அளிக்கும் வகையில்அமைந்திருக்கும்.

3-வது தாளில் கல்வி மற்றும் கல்வி உளவியல் தொடர்பாகஆப்ஜெக்டிவ் முறையிலான வினாக்கள் இடம்பெறும். கடைசியில்முன்பு இருந்து வந்ததைப் போல் நேர்முகத்தேர்வு உண்டு. இந்தநிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களை நேரடித்தேர்வு மூலம் நிரப்புவதற்கு பாடவாரியான பட்டியலைடி.என்.பி.எஸ்.சி.க்கு பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.

நேரடியாக டி... பணியில் சேருவோர், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி (சி...), இணை இயக்குநர், இயக்குநர் எனபடிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.


பணி அனுபவத்துடன் தகுதியும் திறமையும் இருந்தால்ஐ..எஸ்.அதிகாரியாக பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு இருக்கிறது.பதவி உயர்வில் வருவாய்த் துறை அல்லாத பிரிவின் கீழ் ..எஸ்.அதிகாரியாக வருவோரில் பலர் பள்ளிக்கல்வித் துறை உயர்அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக