தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை
சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு மருத்துவம், பொறியியல், கலை,
அறிவியல் பட்டப் படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்ளும்
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழக ஆளுநர் கே. ரோசய்யா
தலைமையில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்
தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அறக்கட்டளை
வெளியிட்டுள்ள செய்தி:
2013-14 கல்வியாண்டுக்கு 500 ஏழை
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இளநிலை பட்ட படிப்பு
மாணவர்களுக்கு ரூ. 5,000-ம், முதுநிலை பட்ட மாணவர்களுக்கு ரூ. 5,000, மருத்துவம்,
பொறியியல் பட்ட மாணவர்களுக்கு ரூ. 6,000, பிஎச்.டி. மாணவர்களுக்கு ரூ. 8,000 என்ற
விகிதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதைப் பெற பெற்றோர் அல்லது
பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
முதலாண்டில் உதவித் தொகை பெற்ற
மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால், படிப்பு முடியும் வரை உதவித்
தொகையை பெற முடியும்.
இதற்கான விண்ணப்பத்தை
"கௌரவச் செயலாளர்' தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 6-வது
தளம், எண் 603, அண்ணா சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு ரூ. 10 அஞ்சல் தலை
ஒட்டிய சுய விலாசமிட்ட உறையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
நவம்பர் 15-ம் தேதி வரை
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்க
நவம்பர் 30 கடைசி தேதி.
கல்லூரிகளில் முதலாமாண்டில்
சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இரண்டாம் ஆண்டு,
மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காமாண்டில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக