பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப்களை வினி யோகிக்கும் வரை தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப்,சைக்கிள் உட்பட 14 விலையில்லா பொருட்களை அரசு வழங்குகிறது.
2012-13ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு லேப்-டாப் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. படிப்பு முடிந்து,சென்ற மாணவர்களை தேடி பிடித்து, உடனே வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில், ""லேப்- டாப் உள்ளிட்ட இலவச பொருட்களை மாணவர்களிடம் ஒப்படைக்கும் வரை, அவற்றிற்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பு. திருடு போனாலும் அதற்குரிய தொகை தலைமை ஆசிரியர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்,'' என, சி.இ.ஓ.,, டி.இ.ஓ.,க்கள் எச்சரித்தனர். தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ""நடப்பு கல்வியாண்டு மாணவர்கள் எனில் உடனே வழங்கிடலாம். 2012-13 என்பதால் சிலரை தேடிப்பிடிக்கவேண்டும். அதுவரை பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனாலும், சில பள்ளிகளில் வாட்ச்மேன்கள் இன்றி, மிகவும் கவனத்துடன் பாதுகாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,''
என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக