முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.
எனவே மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாகநிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும்,அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் . எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக