லேபிள்கள்

9.10.13

மண்டல அளவில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

10,12-வது அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி முகாம் வருகிற 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.

விருதுநகர் அருகே கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்களைக் கழக வளாகத்தில் குறிப்பிட்ட நாளில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் மண்டல அளவிலான பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இதில், 10-வது, 12-வது வகுப்பு அரசு தேர்வில் சராசரிக்கும் மதிப்பெண் குறைவாக பெற்ற உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தப்படுகிறது. எனவே மண்டல அளவிலான மேம்பாட்டு பயிற்சி முகாமில் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து தலைமையாசிரிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த முகாமில் தேர்ச்சி குறைவாக பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது, சராசரி மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவது குறித்தும் மற்றும் இதற்கு தலைமையாசிரிகளின் பங்கேற்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆ.சங்கரன், திட்ட இணை இயக்குநர் ஆ.நரேஷ் ஆகியோர் தலைமையில் முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகவதி பங்கேற்று பயிற்சி அளிக்க இருக்கிறார்.இதில், தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. எனவே இப்பயிற்சி முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உதவி திட்ட இயக்குநர் அதிகமான் தெரிவித்தார்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக