லேபிள்கள்

12.10.13

கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை முடிவு

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை யை, உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, 1973ல் துவக்கப்பட்டது. இதன் தலைவராக, தமிழக கவர்னர் உள்ளார்.
அரசு அதிகாரி, கல்வியாளர்கள், உறுப்பினராக உள்ளனர். 
இதன் சார்பில், மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி., படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அறக்கட்டளை நிர்வாக குழுக் கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில், கடந்த மாதம், 25ம் தேதி நடந்தது. கூட்டத்தில், நடப்பாண்டு, கல்வி உதவி தொகையை, உயர்த்தி வழங்க, முடிவு செய்யப்பட்டது. 
இளநிலை பட்டப்படிப்பு மாணவருக்கு, 5,000; முதுகலை பட்டப்படிப்பு மாணவருக்கு, 5,500; மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்பு மாணவருக்கு, 6,000; பிஎச்.டி., மாணவருக்கு, 8,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது.பிஎச்.டி., மாணவர்களுக்கு 1,500 ரூபாய், மற்ற மாணவர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தப்படுகிறது. அதேபோல், இதுவரை, 450 மாணவர்களுக்கு வழங்கிய உதவித் தொகையை, நடப்பாண்டு, 500 பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை பெற, மாணவர்களின் பெற்றோர் 
அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவரின் மதிப்பெண், 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக