பசுமைப்படுத்தல் திட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி வளாகங்களில், 13 லட்சத்து 93 ஆயிரத்து 695 மரக்கன்றுகள் நட, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதில், வனத்துறை மூலம் 3 லட்சத்து 75ஆயிரத்து 545 கன்றுகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 150 கன்றுகளும் நடப்பட உள்ளன. இவை அனைத்தும், அக்.,31க்குள் நடப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை வகுப்பு வாரியாக மாணவர்கள் பராமரிக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக