பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26) தொடங்கியது.
சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அனைத்து மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் மார்ச் 7-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கால அட்டவணையைத் தயாரித்துள்ளனர்.
செய்முறைத் தேர்வுக்கு பிற பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக