லேபிள்கள்

28.2.14

தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்

பிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக, 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும்
மாணவர்கள், தேர்வை எளிதாக எதிர்கொள்ள இப்போதில் இருந்தே, சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கான, ஆலோசனைகள்.....இதோ:

ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். நன்றாக படித்த பாடங்களுக்கு குறைந்த நேரமும், அதிகம் படிக்காத பாடங்களுக்கு, அதிக நேரமும் ஒதுக்க வேண்டும்.
கணக்கு, வரைபடங்களுக்கு, தினமும் தனியாக நேரம் ஒதுக்குவது நல்லது. படிப்பின் இடையே, டீ, பிஸ்கட், வெள்ளரி, பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள், படிப்பில் மட்டுமே முழு கவனம் செல்ல வேண்டும். 
படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதுவது, 16 முறை படிப்பதற்கு சமம்.
கிரிக்கெட் விளையாடுவது, "டிவி' பார்ப்பதை கைவிடுவது நல்லது; அப்போது தான் அதிக மதிப்பெண் பெற முடியும்.
தேர்வு காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலம் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது.
தேர்வுக்கு தயார் செய்யும் நேரத்தில், தியானம் செய்வது, பிடித்த விளையாட்டு விளையாடுவது பதற்றத்தை தணிக்கும்.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, எழுது பொருட்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்குச் செல்லும் முன், தேவையான அனைத்தும் உள்ளதா என, சோதித்து பின், அறைக்குள் செல்ல வேண்டும்.
தேர்வுக்கு முந்தைய அரை மணி நேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்.
தேர்வில், ஒரு மதிப்பெண் பதில்களை முதலில் எழுதிவிட வேண்டும்; பின், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுதலாம். கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம்.
தேர்வு முடிய, இரண்டு நிமிடத்திற்கு முன் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக