லேபிள்கள்

1.3.14

சம்பள அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பணி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சம்பள அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.


கலெக்டரிடம் கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இள.பாபுவேலன், செயலாளர் பிளசிங் பாக்கியராஜ் ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான மு.கருணாகரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களாக தர ஊதியம் அடிப்படையில் தேர்தல் பணி பதவிகள் அளிக்க வேண்டும்.


பணி ஒதுக்கீடு

கடந்த தேர்தலின் போது அதிக தர ஊதியம் ரூ.4,600 பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச் சாவடி அலுவலர் நிலை –1 ஆக பணி வழங்கப்பட்டது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்களை விட குறைவான தரஊதியம் ரூ.4,500 பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி வழங்கப்பட்டது. இதனால் தேவையற்ற குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

முழுமையாக தர ஊதிய அடிப்படையில் தேர்தல் பணிகள் அளிக்கப்பட வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தேவையான வாகன வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக