லேபிள்கள்

24.2.14

ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு


தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அண்மையில் தமிழக முதலமைச்சர் 2013ல் தேர்வு எழுதியவர்களில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5% மதிப்பெண் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து 2012ல் ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை
எழுந்தது, ஆனால் இதன் சார்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக