தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர்
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கல்வியாண்டின் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்ட நிலையில், தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஸீ549 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. ஆராய்ச்சி படிப்பை (எம்.பிஎல், பி.எச்டி) மேற்கொண்டுள்ளவர்களுக்கும் யூஜிசி மூலம் மத்திய அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதுவும் பல மாதங்களாகியும் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. 5 வருட ஆராய்ச்சி படிப்பில் பொதுப்பிரிவில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுக்கு மாதந்தோறும் ஸீ16 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுக்கு மாதந்தோறும் ஸீ18ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதோடு புத்தகம் வாங்க, வீட்டுப்படி உள்ளிட்ட இதர செலவுக்கு குறைந்தபட்சம் ஸீ10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, ஸ்காலர்ஷிப் பணம் இறுதி செய்யப்பட்ட பிறகே பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு சேர்ந்த மாணவர்கள் பலரும் ஆராய்ச்சி படிப்பை முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் ஸ்காலர்ஷிப் மட்டும் கிடைத்தபாடில்லை.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி கூறுகையில், முதல் 8 மாதங்களுக்கு பணம் வழங்கப்பட்டது. தற்போது 4 ஆண்டில் முதுநிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இளநிலையில் 18 மாதங்களும், முதுநிலையில் 24 மாதங்களும் எனக்கு உதவித் தொகை வரவேண்டி உள்ளது. எல்லாம் சேர்த்து ஸீ6 லட்சம் வரையில் எனக்கு மட்டும் பணம் வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் அலட்சியம் தான் இதற்கு காரணம். ஆராய்ச்சிக்கு தேவையான பணத்தை திரட்டுவதிலேயே அதிக நேரம் செலவாகி விடுகிறது. பலரும் நகைகளை அடகுவைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆராய்ச்சி கல்வி முடிவதற்குள் கல்வி உதவி தொகை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக