லேபிள்கள்

25.2.14

இன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு

 இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி  பிப்ரவரி 25ம் தேதி நடத்த உள்ள உள்ளிருப்பு
போராட்டம் மற்றும் 26ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது. அனைத்து பள்ளிகளும் இந்த நாட்களில் முழுமையாக செயல்படும் விதத்தில் மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசிரியர்களை அமர்த்த வேண்டும். இத்தகைய மாற்று பணிக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்று பணியில் அமர்த்தப்பட்டு பள்ளிக்கு செல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க வேண்டும். 

இரு நாட்களிலும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்பவர் பட்டியலை காலை 10 மணிக்குள் இயக்குநருக்கு இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். போராட்ட தினங்களில் பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு சுமூகமான சூழ்நிலை நிலவும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உதவி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள் முழு பொறுப்பேற்று தமது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.  இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக