பொது தேர்வு தொடர்பாக, எந்த புகாரோ, சர்ச்சைகளோ வராத அளவிற்கு, சுமுகமாக நடத்த வேண்டும்,'' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வீரமணி, எச்சரிக்கை விடுத்தார்.
பொது தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர், வீரமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், துறை முதன்மை செயலர், சபிதா உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் பேசியதாவது: எவ்வித புகாருக்கும் இடம் தராமல், சர்ச்சை வராத அளவிற்கு, தேர்வை, சுமுகமாக நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு மையம் முதல், விடைத்தாள்களை கையாள்வது வரை, அனைத்துப் பணிகளையும், கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு, விடைத்தாள் கட்டு, சேதமானது மற்றும் காணாமல் போன விவகாரம், பெரும் சர்ச்சையை எழுப்பியது. அது போன்ற சம்பவங்கள், வரும் தேர்வில் நடந்து விடக் கூடாது. அதிகாரிகள் அனைவரும் இணைந்து, விழிப்புடன் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
பிளஸ் 2 தேர்வு 8.26 லட்சம் பேர்; 10ம் வகுப்புக்கு 10.38 லட்சம்
- நமது நிருபர் -
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும், மாணவ, மாணவியரின் முழுமையான விவரம் ?வளியாகி உள்ளது. பிளஸ் 2 தேர்வை, 8.26 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.38 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு, மார்ச் 3 முதல், 25 வரையில், 2,238 மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 26 முதல், ஏப்ரல் 9 வரை, 3,183 மையங்களிலும் நடக்கின்றன.
இதன் விவரம்:
பிளஸ் 2
மாணவர் - 3,80,271
மாணவியர் - 4,45,796
மொத்தம் - 8,26,067
பத்தாம் வகுப்பு
மாணவர் - 5,30,376
மாணவியர் - 5,08,360
மொத்தம் - 10,38,736

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக