லேபிள்கள்

26.2.14

இளம்பெண்கள் பாதுகாப்பிற்கு தனி கமிட்டி:பல்கலை கழகங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்

கல்லுாரிகள், பல்கலைகளில் படிக்கும் இளம்பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, யு.ஜி.சி.,யின் அதிரடிப்படை அளித்துள்ள பரிந்துரைகளை,
உடனடியாக அமல்படுத்தும்படி, யு.ஜி.சி., தலைவர், அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் படிக்கும், இளம்பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, பல்கலைக் கழக மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில், அதிரடிப்படை ஒன்றை அமைத்தது. இப்படையினர், நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைக் கழக வளாகங்களில், ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், 'சாக்ஸம்' என்ற ஆய்வறிக்கையை, சமீபத்தில், சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையை, இம்மாதம், 12ம் தேதி, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் உள்ள, சில குறிப்பிட்ட பரிந்துரைகளை, விரைவில் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்த வேண்டும்.இதையடுத்து, ஆய்வறிக்கையை, யு.ஜி.சி., தன், இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. மேலும், இதுகுறித்து, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும், யு.ஜி,சி., தலைவர் தேவ் ஆனந்த், கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 'சாக்ஸம் அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்த, ஒரு மூத்த பேராசிரியரை நியமிக்க வேண்டும். பல்கலைகளின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களும் இந்த பரிந்துரைகளை, விரைவில், அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, யு.ஜி.சி.,யில், பாலின பதற்ற தடுப்பு பிரிவு அமைக்கப்படுகிறது. இந்த பிரிவு, தலைமை அமைப்பாக செயல்பட்டு, கல்லுாரிகள் மற்றும் பல்கலை வளாகங்களில், பாலின அடிப்படையிலான மோதல்கள் தடுக்கும் கொள்கைக்கு, முழு வடிவம் கொடுக்கும்.
மேலும், கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில், புகார் கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்த கமிட்டி, புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, வகுக்கப்பட்ட விதிகளின் படி விசாரணை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட சில பரிந்துரைகள்=பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் நேரா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக