சத்துணவு கலவை சாதம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் இந்த நிதியாண்டில் ரூ.19ஆயிரத்து 634 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்தில்ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஒரு ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள்மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில்சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன் மசாலாசேர்த்த முட்டை வழங்கும் முன்னோடித் திட்டம் சென்ற ஆண்டுசெயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பயனாளிகள் மத்தியில்நல்ல வரவேற்பு உள்ளதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடிமையங்களுக்கும், பலவகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்தமுட்டை உணவு வகைகள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும். இதற்குரூ.100 கோடி செலவாகும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக