லேபிள்கள்

14.8.14

மாநகராட்சி பள்ளி போலி ஆசிரியர் விவகாரம் அவ்ளோ தான்! சிக்காமல் தப்பிக்க பணி மாறுதலுக்கு முயற்சி? - தினமலர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ்ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சிகைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்எடுப்பதற்குள்,
மாநகராட்சி பள்ளிகளை விட்டு, பணி மாறுதல் பெற, போலிஆசிரியர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 122 துவக்க பள்ளிகள்உள்ளன. இதற்காக, 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்பணியில் உள்ளனர்.

2 பேர் நீக்கம் : இதில், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள்,கடந்த, 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறுகட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள். அப்போது, இடைநிலை ஆசிரியர்பயிற்சி, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அப்போதுபணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல், 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் போலியாக சான்றிதழ் பெற்று, அதன் மூலம்பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, அடிக்கடிசர்ச்சை எழுவதும், மாநகராட்சி கல்வித்துறை அவ்வப்போதுநடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.ஐ.ஏ.எஸ்.,அதிகாரி விஜயகுமார், மாநகராட்சி கமிஷனராக இருந்த போது, இந்தவிவகாரத்தில் இரண்டு பேரை பணிநீக்கம் செய்தார். அதன் பிறகுகடந்த ஆண்டு இப்பிரச்னை வெடித்தது.
தொடர்கிறது : அப்போது ஒன்பது பேர் மீது புகார் நிரூபிக்கப்பட்டு,எட்டு பேரை, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர்பணிநீக்கம் செய்தார். ஒருவரின் சான்றிதழ் உண்மையானது என்றுகூறி, அந்த ஆசிரியர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில், 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்து, போலிஆசிரியர்களை முழுமையாக களையெடுக்க, மேயர் சைதைதுரைசாமி உத்தரவிட்டார். இதற்காக 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ்நகல்களை, மாநகராட்சி கல்வித் துறை பெற்றது. ஆய்வின்அடிப்படையில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் யாரும் போலிசான்றிதழ் பெற்றவர்கள் இல்லை என்ற முடிவுக்கு மாநகராட்சிவந்துள்ளது.ஆனால், தற்போதும் 50க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக விவரம் அறிந்த மாநகராட்சிஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், இந்த போலி சான்றிதழ்ஆசிரியர்கள், தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்ள,மேலிடங்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட, ஆட்களை பிடிக்கும்வேலையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனி குழு தேவை : சமீபத்தில் புதுச்சேரி அரசு பள்ளியில், போலிசான்றிதழ் ஆசிரியர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, மாநகராட்சி இந்தவிஷயத்தை எப்போது வேண்டுமானாலும், மீண்டும் கையில்எடுக்கலாம் என்று கருதப்படுவதால், சில ஆசிரியர்கள், மாநகராட்சிபள்ளியில் இருந்து வெளி இடத்திற்கு பணி மாறுதல் பெறமுயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.இதற்காக தடையில்லா சான்றுகேட்டு சில ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மாநகராட்சிகல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த விஷயத்தில்மாநகராட்சி விஜிலென்ஸ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின்விசாரணையை மட்டும் நம்பாமல், போலி ஆசிரியர்களைகளையெடுக்க, அரசு தனி குழுவை அமைக்க வேண்டும் என்றும்,இதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.
வெளிவந்தவை என்ன?
கடந்த ஓராண்டில் மாநகராட்சி விஜிலென்ஸ் மூலம்,வெளிச்சத்திற்கு வந்த சில விஷயங்களும், அவற்றின் தற்போதையநிலையும்:
* மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம், தவறான தகவல்தெரிவித்து, பாஸ்போர்ட் பெற முயன்ற விவகாரம் வெளிச்சத்திற்குவந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
* மாநகராட்சி போலி ஆசிரியர் விவகாரத்தில், எட்டு பேர் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர் விசாரணை இல்லாமல்விவகாரம் முடக்கப்பட்டது.

* மாநகராட்சி சாலைகளில் போடப்பட்ட அனுமதி பெறாத பேருந்துநிழற்குடைகள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால்,நிழற்குடைகள் இன்னும் பல இடங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
* போலியாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டவிவகாரத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, சுகாதாரஆய்வாளர்கள், நகராட்சிகளில் பணியில் சேர்ந்து, எந்த பிரச்னையும்இல்லாமல் உள்ளனர். மாநகராட்சியும் அதைகண்டுகொள்ளவில்லை.

* கழிப்பறை வசூல் விவகாரத்தில் பெயருக்கு சிலர் மீதுகாவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இன்னும் பல இடங்களில்வசூல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக