லேபிள்கள்

15.8.14

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு டிஆர்பி செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்யக்கோரிய வழக்கில், டிஆர்பி உறுப்பினர் செயலருக்குநோட்டீஸ்
அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 மதுரை மாவட்டம்மேலவளவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்து, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: எம்காம், பிஎட் முடித்துள்ளேன்.டிஆர்பி மூலம் கடந்த 21.7.2013ல் நடந்த முதுகலை வணிகவியல்பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்து கொண்டேன். கட் ஆப்மதிப்பெண் 101 பெற்றேன். வினாத்தாள் அமைப்பு முறை, கீ ஆன்சர்வெளியிட்டது உள்ளிட்டவற்றில் பெருமளவு மோசடி நடந்துள்ளது.

300 காலி பணியிடத்திற்கு 354 பேரை சான்றிதழ் சரிபார்ப்பிற்காகஅழைத்துள்ளனர். இது சட்டவிரோதம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எனஇதுவரையில் 5 பட்டியல் வெளியிட்டுள்ளனர். முறைகேடுநடந்துள்ளதால் உரிய கட் ஆப் மதிப்பெண்ணை என்னால்பெறமுடியவில்லை. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலையும்,தேர்வுக்கான அறிவிப்பையும் ரத்து செய்து உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி கே.சசிதரன்விசாரித்தார். மனு குறித்து டிஆர்பி உறுப்பினர் செயலருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக