கட்டாய கல்விச்
சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பிறகு, 2010, ஆகஸ்ட் 23 க்கு பிறகு பள்ளிகளில்
நியமிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தியது.
ஆனால்
பள்ளிக்கல்வித் துறையின் ஒரு அங்கமாக விளங்கும் ஆசிரியர் தேர்வாணையம் முதன் முதலில்
தகுதித்தேர்வின் மூலம் ஆசிரியரை தேர்வு செய்ய வெளியிட்ட அறிவிப்பில் 2010,ஆகஸ்ட்
23 க்கு முன்பு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு,
காலதாமதமாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் தகுதித்தேர்வு எழுத தேவையில்லை அறிவித்தது.
மேலும் 2010 ஆகஸ்ட் 23 க்கு பிறகு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தால்
கண்டிப்பாக தகுதித் தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்தது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வறிவிப்பால்
2010 ஆகஸ்ட் 23 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு காலதாமதமாக பணிநியமனம்
செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிம்மதியுடன் தங்கள் கல்விப் பணியை தொடர்ந்தனர்.
இந்நிலையில், 2010, ஆகஸ்ட் 23 முன்பு சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்து கொண்டு காலதாமதமாக பணிநியமினம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின்
வளரூதியத்தை திரும்ப பெறுமாறும், அது குறித்த விபரத்தினை அறிக்கையாக உடனடியாக அலுவலகத்திற்கு
தெரிவிக்கும் படியும் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவினை அனைத்து
உதவித் தொடக்க கல்வி அலுவலருக்கும் வழங்கி உள்ளார்.
இதனால்
நடுநிலைப்பள்ளியில் நியமினம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மனம் வேதனை அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பினை நம்பி ஏமாந்து இன்று வளரூதியத்தை இழக்கும்
சூழ்நிலை உருவாகியுள்ளதால் இவ்விசயத்தில் தொடக்க கல்வி இயக்குனர் தான் தங்கள் பிரச்சினை
தீர்க்கவேண்டும் எனவும் பட்டதாரி ஆசிரியர்கள் கோருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக