அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஆங்கிலத்திற்கு, 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு, 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்திற்கு, 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
காரணம் என்ன?
தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக