ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரைஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஆதி திராவிடர் மற்றும்பழங்குடியினர்
நலத்துறையின் கீழ், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசுபழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்குஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம். இவர், 'நாகர்கோவில் பஸ்ஸ்டாண்டில் இருந்த பிளஸ் 2 மாணவர்களை, கலெக்டர்அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போராட்டத்தை தூண்டினார்,'எனக்கூறி, கன்னியாகுமரி கலெக்டர் 2013 ல் 'சஸ்பெண்ட்'செய்தார்.இதை எதிர்த்து ரசாலம்,' என் மீது நடவடிக்கை எடுக்க,கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறைஅதிகாரி தான் நடவடிக்கை எடுக்க முடியும். விளக்கம் அளிக்கவாய்ப்பளிக்கவில்லை. கலெக்டர் உத்தரவை ரத்து செய்யவேண்டும்,' என, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. கலெக்டர்தரப்பில், 'தேர்வு
சமயத்தில் மாணவர்களை படிக்கவிடாமல், கலெக்டர் அலுவலகம்அழைத்து வந்தார். இது நன்னடத்தையை மீறிய செயல்,' எனவலியுறுத்தப்பட்டது.நீதிபதி: கலெக்டர் தான் மாவட்டத்திற்குதலைவர். அனைத்துத் துறைகளுக்கும் பொறுப்பானவர். பொதுத்தேர்வு துவங்க 5 நாட்களுக்கு முன்பு, மாணவர்களை கலெக்டர்அலுவலகத்திற்கு, மனுதாரர் அழைத்து வந்தது நன்னடத்தையைமீறிய செயல். இது பற்றி, குழந்தைகள் நலக்குழு, நேசமணி நகர்போலீசில் புகார் செய்துள்ளது.மனுதாரர் மீது கலெக்டர் முதலில்நடவடிக்கை எடுத்தாலும், பின் ஆதிதிராவிடர் நலத்துறையின்ஒப்புதல் பெற்றுள்ளார். இதில் தவறு காண முடியாது. மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக