மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில்,பணி ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாதசம்பளம் இன்னும்
கிடைக்கவில்லை.
தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்'கவுன்சிலிங்' ஜூனில் நடந்தது. உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்'மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26 ல் நடந்தது. அப்போது, மாநிலம்முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட 'சர்பிளஸ்' ஆசிரியர்களை,பணிநிரவல் அடிப்படையில் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம்தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி,கல்வித் துறை உத்தரவிட்டது.
இப்புதிய பணியிடங்களை, ஜூன் 26 ல் நடந்த பட்டதாரிஆசிரியர்களுக்கான பணிநிரவல் 'கவுன்சிலிங்' மூலம் சுமார் 200இடங்கள் வரை ஒதுக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 26பணியிடங்கள் இந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டது. ஆனால்,பணியேற்று ஒரு மாதம் நிறைவுற்றும், அவர்களுக்கு சம்பளம்இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கலந்தாய்வில்கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான அரசுஉத்தரவை எதிர்பார்க்கிறோம். பின், அவர்களுக்கு சம்பளம்வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டும். ஓரிருவாரங்களில் இதற்கு தீர்வு கிடைத்து விடும். அதன்பின்,வழக்கம்போல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக