ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில்அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும்என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்பளகமிஷன் தலைவர்ஓய்வு பெற்ற நீதிபதி
ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு முந்தையகாங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்அமைக்கப்பட்டு, இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதிஏ.கே.மாத்தூர் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 7வது சம்பளகமிஷன் படி, ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்சசம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அகில இந்தியமத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனக்குழு ஓய்வு பெற்ற நீதிபதிஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்குஏற்ப, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 26ஆயிரம் வழங்க வேண்டும்.
தற்போது 3 முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனைமுதல்நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதை போல 5 முறையாகமாற்ற வேண்டும். கருணை அடிப்படையிலான பணியை 3மாதத்துக்குள் வழங்க வேண்டும். குரூப் சி மற்றும் டி பிரிவுஊழியர்களுக்கு முழுவருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 50சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை 67 சதவீதமாக உயர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள்வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக