லேபிள்கள்

22.8.14

விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். -Maalaimalar

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. 

விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும்.அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன. 

நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன. 

இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக