லேபிள்கள்

17.8.14

ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் உண்ணாவிரத போரட்ட அறிவிப்பு .

ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் நாளை 18.8.14 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு   உண்ணாவிரத போரட்டத்திற்கு காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற்றுள்ளனர்

முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்தகல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன்ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம்கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்தவேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண்பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண்தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால்,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணிவழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள்,அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்பணி அனுபவம் மற்றும்வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணிஇடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளிகாலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக