தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுசெயலர், பேட்ரிக் கூறியதாவது: கடந்த, 2003க்குப் பின், கல்வித்துறையில், ஒரு லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களின் பணம், கோடிக்கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம், ஆசிரியர்களுக்கே தெரியாது. பல ஆசிரியர்கள் இறந்துவிட்டனர். அவர்களுக்குரிய பணம், இதுவரை சென்று சேரவில்லை. உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், முறையாக கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. உள்ளூர் தணிக்கையும் நடப்பதில்லை. பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு, கணக்குகளை மாற்றினால், பிரச்னை தீரும் என நம்புகிறோம்.
இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக