லேபிள்கள்

23.8.14

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் என்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

மயங்கி விழுந்த இருவருக்கும் டாக்டர்கள் ‘குளுக்கோஸ்’ ஏற்றி சிகிச்சை வழங்கினர். ஆனால், பிற பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதற்கிடையில், தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் நேற்று அங்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை மெரினா கடற்கரை அருகே போலீசார் கைது செய்தனர். சேப்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக