லேபிள்கள்

23.8.14

டி.என்.பி.எஸ்.சி. சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி பொது சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
            இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய துளைப்பொறி இயக்குபவர் (டன்ய்ஸ்ரீட் ஞல்ங்ழ்ஹற்ர்ழ்) பணிக்கான 25 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வை நடத்தியது.

             இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவை அடிப்படையில் தாற்காலிக நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற்றது.

                  இந்தத் தேர்வில் கலந்து கொண்டவர்களின் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் ""www.tnpsc.gov.in'' என்ற இணைய தளத்தில் வியாழக்கிழமை (ஆக.21) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக