லேபிள்கள்

23.8.14

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சாதனைக்கான பிரதமர் விருது

அரசு ஊழியர்களின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் விதமாக,
சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளின் பணியை ஊக்குவித்து பாராட்டும் விதமாக, மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில், சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவன அடிப்படையிலோ, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த, 2013 14க்கான விருதுக்கு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள். அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்களை, நிர்வாக சீர்திருத்தத் துறை வரவேற்றுள்ளது.
விண்ணப்பங்களை, அக்டோபர், 17ம் தேதிக்குள், டில்லி, பார்லிமென்ட் தெரு, சர்தார் படேல் பவன், ஐந்தாவது தளத்தில் உள்ள, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறையின் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். இதற்கான மாதிரி படிவம் மற்றும் திட்டம் குறித்த இதர தகவல்கள், நிர்வாக சீர்திருத்தத் துறையின், ஞீணூணீஞ்.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தை பார்த்து அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக