லேபிள்கள்

22.8.14

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார்

ஆசிரியர் தேர்வு வாரியம்முதுகலை ஆசிரியர், 2,000 பேர்பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலைபள்ளி கல்வித்துறைக்குஅனுப்பி 
உள்ளதுதேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு,முதல்வர் ஜெயலலிதாவிரைவில்தலைமை செயலகத்தில்பணிநியமன ஆணையை வழங்குவார் என,
 எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்கடந்த ஆண்டுஜூலையில் நடந்த போட்டிதேர்வில்
 இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு பெற்ற,12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை,கடந்தமூன்று நாட்களில்பள்ளி கல்வித்துறையிடம்ஆசிரியர்தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளதுஎனவேஓரிரு நாளில்பணிநியமன நிகழ்ச்சி நடக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால்,எளிய நிகழ்ச்சியாக நடத்துவதாஅல்லது பிரமாண்டமாக விழாநடத்திமுதல்வர் கையால்பணி நியமன உத்தரவை வழங்குவதாஎன்பது குறித்துஇன்னும் முடிவு எடுக்கவில்லைகடந்த, 2012ல், 20ஆயிரம் ஆசிரியர்களுக்குபணி நியமனம் வழங்கும் விழா,சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.., மைதானத்தில்பிரமாண்டமாகநடந்ததுஅதன்பின்தற்போது தான்அதிகளவில்ஆசிரியர் நியமனம்செய்யப்பட உள்ளனர்.
எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை,முதல்வர் எடுப்பார் எனகல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில்விழாஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும்எனவேமாணவர்களின்நலன் கருதிஓரிரு நாளில்எளிய முறையில்தலைமைசெயலகத்தில்நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்குமுதல்வர்பணிநியமன உத்தரவை வழங்குவதற்குஅதிக வாய்ப்பு உள்ளதாகவும்கூறப்படுகிறதுஇதன்பின்கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும்நியமனம் செய்யபள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.


2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறதுஇட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வுசெய்யப்படுவது குறித்த அறிவிப்பைஆசிரியர் தேர்வு வாரியம்,இன்று வெளியிடுகிறதுஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில்இருந்துமதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்படஉள்ளனர்ஆனால்எந்தெந்த பிரிவில்எத்தனை பணியிடம்நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்புஇன்று வெளியாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக