லேபிள்கள்

20.8.14

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டிகுடும்ப ஓய்வூதியம்இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்மத்திய அரசுப்பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும்தமிழகஅரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் அனைவரும்
புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

புதிய பென்ஷன் திட்டத்தின்படிஅரசு ஊழியரின் அடிப்படைச்சம்பளம்தர ஊதியம்அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொருமாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியநிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறதுஅதே தொகைக்குஇணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்துகிறதுஇவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம்அந்த ஊழியர்ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும்மீதமுள்ள 40 சதவீதத் தொகைபங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம்ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.

ராணுவத்தினருக்கு விதிவிலக்கு

இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமானஉத்தரவாதமும் அளிக்கப் படவில்லைபுதிய ஓய்வூதியதிட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி..) என்ற அமைப்பு கவனித்துவருகிறதுபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்குமட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம்திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன்திட்டத்தைப் பின்பற்றவில்லைநீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்துவந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன்திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.

கிராஜுவிட்டி ரத்து

அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி(பணிக்கொடைகிடைக்கும்பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம்16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்)பணிக்கொடையாக வழங்கப்படும்.

அதேபோல்,30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம்அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம்ஓய்வூதியமாக கிடைக்கும்ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால்அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்பஓய்வூதியமாக வழங்கப்படும்இந்நிலையில்பிஎப்ஆர்டிஏஅண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன்திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்றுகூறப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர்தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர்அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார்.அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில்தமிழ்நாடு ஓய்வூதியவிதிகள் 1978 க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள்தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும்மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்கீழ் உள்ள ஊழியர்கள்தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே,2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசுஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாதுஎன்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது.அதேபோல்அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்)பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது.தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ்வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம்ரத்தாகிவிடும்.

தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசுஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்புதிய பென்ஷன் திட்டத்தில்கிராஜுவிட்டிகுடும்ப ஓய்வூதியம் இல்லாததால் இந்த 2 லட்சம்பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்துபுதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்கூறும்போது, ‘‘பணிப் பாதுகாப்புஓய்வூதியம்குடும்ப ஓய்வூதியம்போன்ற பயன்கள் கிடைக்கும் என்பதால்தான் எல்லோரும் அரசுவேலையை விரும்புகின்றனர்நாங்களும் அப்படி நினைத்துதான்பணியில் சேர்ந்தோம்ஆனால்தற்போது அந்தப் பயன்கள் எதுவும்கிடைக்காது என்பதை நினைத்தால் ஏமாற்றமாகவும்,வேதனையாகவும் உள்ளதுதமிழக அரசு முன்பு நடைமுறையில்இருந்த வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக