லேபிள்கள்

2.9.14

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் (2.9.14) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் - தினத்தந்தி

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

நடைபெற உள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர்–2014, எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்–லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 2–9–2014 செவ்வாய்கிழமை (இன்று) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘‘SSLC SEPTEMBER/OCTOBER 2014 EXAMINATION HALL TICKET’’ என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்து, தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக