லேபிள்கள்

4.9.14

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது?

காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் அலுவலகத் தில் கொடுத்த, மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012ல், 451 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட, 753 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி அளித்தது. அதன்படி, காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. தகுதி வாய்ந்த நபர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. அதன்பின் அப்பணி நிறுத்தப்பட்டு விட்டது. அடுத்து, 2013ல், 116 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி, உடனடியாக மாநில பதிவு மூப்பு பட்டியல் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக