வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆசிரியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற் றும் சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் ஒப்படை க்க முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கோயம்பேடு விளையாட்டு நகரம் எதிரில் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சசிகலா(35), என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான தகுதி தேர்வு அனுப்பப்பட்டது. அதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோ�ர் எழுதியுள்ளனர். அவர்களில் 17,500 பட்டதாரி ஆசிரியர்களும், 11,000 இடை நிலை ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பின்னர் இட ஒதுக்கீடு அடிப்படையில் 5 சதவிகித மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டது. அதனால் கூடுதலாக 58,000 பேர் தகுதி பெற்றனர்.
பின்னர் அரசு தகுதி தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களும், மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற மதிப்பெண்கள் 40 சதவிகிதமும், அடங்கிய வெயிட்டேஜ் முறையை அரசு அறிவித்தது.
இதனால் சில வருடங்களுக்கு முன் பயின்றவர்கள் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுவதாக கூறி வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர், அவர்கள் கோயம்பேடில் 100 அடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் ஆக அனைவரும் கைது செய்யப்பட்டு, நெற்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநில தேர்தல் ஆணையம் முற்றுகைஆர்ப்பாட்டத்தின்போது மயங்கி விழுந்த பெண் முகத்தில் தண்ணீர் தெளிக்கின்றனர்.
பின்னர், ஆசிரியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற் றும் சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் ஒப்படை க்க முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கோயம்பேடு விளையாட்டு நகரம் எதிரில் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சசிகலா(35), என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான தகுதி தேர்வு அனுப்பப்பட்டது. அதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோ�ர் எழுதியுள்ளனர். அவர்களில் 17,500 பட்டதாரி ஆசிரியர்களும், 11,000 இடை நிலை ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பின்னர் இட ஒதுக்கீடு அடிப்படையில் 5 சதவிகித மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டது. அதனால் கூடுதலாக 58,000 பேர் தகுதி பெற்றனர்.
பின்னர் அரசு தகுதி தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களும், மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற மதிப்பெண்கள் 40 சதவிகிதமும், அடங்கிய வெயிட்டேஜ் முறையை அரசு அறிவித்தது.
இதனால் சில வருடங்களுக்கு முன் பயின்றவர்கள் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுவதாக கூறி வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர், அவர்கள் கோயம்பேடில் 100 அடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் ஆக அனைவரும் கைது செய்யப்பட்டு, நெற்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக