லேபிள்கள்

3.9.14

நாகை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்.8 உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 8ம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அன்று, மாவட்ட
கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு வேலை நிமித்தம் காரணமாக குறைந்த எண்ணிக்கை கொண்ட ஊழியர்களை கொண்டு செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, செப்., 13 ல், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாக இயங்கும். இவ்வாறு நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக