ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, ஆசிரியர்தேர்வு
வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம், நாளை நடத்தப்படும்
என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும்,
ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டும்; வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் 10 நாட்களுக்கும்மேலாக, ஒரு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை, கல்வித்துறை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கூறுகையில், "வெயிட்டேஜ் முறையை எதிர்த்து 5ம் தேதி (நாளை), எங்கள் சான்றிதழ்
களை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்ஒப்படைப்போம். மேலும், வாக்காளர் அடையாள அட்டையை,தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்"என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக