லேபிள்கள்

5.9.14

பிரதமர் மோடி பேச்சை ஒளிபரப்ப கல்வித்துறை... கைவிரிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று மாலை, மாணவர்களுடன் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம், பிரதமரின் உரையை கேட்பதற்கு கூட, கல்வித் துறை ஏற்பாடு செய்யாமல், மாணவர்களுக்கு கைவிரித்து விட்டது. எனினும், வழக்கம் போல, ஆசிரியர் தினம் கொண்டாட முடிவு செய்து உள்ளது.


முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், மாணவ, மாணவியர் மீது, அளவு கடந்த அன்பு கொண்டவ ராக விளங்குகிறார். எப்போதும், மாணவர்களுடன் பேசுவதையும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதையும், கலாம், வழக்கமாகக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி பதவியில் இருந்தபோது மட்டுமில்லாமல், இப்போதும், மாணவர்களை சந்திப்பதை, கலாம் நிறுத்தவில்லை. கலாமின் இந்த அணுகுமுறை, மாணவர்களுக்கு, உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.
கலாம் வரிசையில்... தற்போது, கலாம் வரிசையில், பிரதமர் மோடியும்,மாணவர் மற்றும் இளைஞர்களை கவரும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள்ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாகக்கொண்டாடப்படுகிறது.


மோடி உரை :இதையொட்டி, இன்று மாலை, மாணவர் மத்தியில், மோடி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடுசெய்துள்ளது.'வீடியோ கான்பரன்சிங்' நாடு முழுவதும், பல்வேறு நகரங்களில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், பிரதமரிடம், மாணவர்கள் கேள்வி கேட்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
ஆனால், பிரதமர் பேச்சை, மாணவர்கள் கேட்கவும், பிரதமருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், தமிழக அரசு, ஏற்பாடு செய்ய வில்லை. 'மேலிடத்தில் இருந்து, உத்தரவு வராததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. 

ஏமாற்றம் :இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: மாணவர் மத்தியில், பிரதமர் பேசும் நிகழ்ச்சி,வரவேற்கதக்கது.ஆனால் நிகழ்ச்சியை,மாணவர்கள்பார்ப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள், பெரும்பாலான அரசு பள்ளிகளில் இல்லை.வட்டார வள மையங்களில், 'வீடியோ கான்பரன்சிங்' வசதிகள் இருக்கின்றன. ஆனால், பல மையங்களில், அந்த சாதனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளன.

மேலும், வட்டார வள மையங்களில், மேற்பார்வையாளர்களாக இருந்தவர்கள் தான், 'வீடியோ கான்பரன்சிங்' ஏற்பாடுகளை செய்வர். அவர்கள், ஆசிரியர்களாக, பணி மாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இதனால், எதற்கும் வழியில்லை.இவ்வாறு, சாமி சத்தியமூர்த்தி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக