லேபிள்கள்

4.9.14

ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா? தமிழ் முரசு

தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும்
அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே 
இருக்கும்.சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த 
அதே அதிகாரியேஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில்அபிடவிட் தாக்கல் செய்தார் 
அதுதான் முதல் கோணல்அதன்பின்ஆசிரியர் நியமனம் உள்பட
பல்வேறு விஷயங்களிலும் குழப்பங்கள் நீடிக்கிறதுஇந்த சூழ்நிலையில்,பட்டதாரிஇடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கடந்த 
ஆண்டில் தகுதிதேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியதுஇதில் 
பெற்ற மதிப்பெண்கள்மற்றும் எஸ்.எஸ்.எல்.சிபிளஸ் 2 தேர்வுகளில் 
பெற்ற மதிப்பெண்களையும்சேர்த்து புதிதாக வெயிட்டேஜ் மதிப்பெண் 
கணக்கிட்டுஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்.

இப்போதைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கூடஇன்டர்நெட்உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வசதிகளும் கிடைத்துவிடுகின்றனஅதனால்கிராமப்புற மாணவர்களும் பொது தேர்வுகளில்சர்வசாதாரணமாக 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுவிடுகிறார்கள்ஆனால்அந்த காலத்தில் அதிகமாக போராடி 60 சதவீத மதிப்பெண்பெற்றவர்களுக்கு அதனடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து வேலைநியமனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறதுஇது ஒரு வகையில்அவர்களை நிராகரிப்பதற்கு சமமாகிறதுஇது நியாயமற்றதுஇதனால்,பாதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களைநடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போதுகடும் மன உளைச்சலில்இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.இதன்பின்பும்கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல்அமைதி காப்பது சரியாக இருக்காதுமாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்காலசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்அவர்களுக்கு எந்த ஒரு அரசும்எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வுசெய்ய அரசு முன் வர வேண்டும்அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச்செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனவேபோராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணஅதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக