அரசு ஊழியர்களுக்கு இனி வருங்கால வைப்பு நிதி பட்டியல், 'ஆன்லைனில்'தான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர் களுக்கு வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எப்.,) விபரம், தனித்தனியாக அவர்கள் அலுவலகம் மூலம் அனுப்பப்படுகிறது.
இனி, 2014 15ம் ஆண்டுக்கான வைப்புநிதி விபரம் தனியாக அனுப்பி வைக்கப்படமாட்டாது. ''இணையதளத்தில், 'தீதீதீ.ச்ஞ்ச்ஞு.tண.ணடிஞி.டிண' என்ற முகவரியில், வைப்புநிதி விபரத்தை பதிவிறக்கம் செய்து பெற வேண்டும். அதனை அவர்கள் தற்காலிக கடன், முன்பணம் பெறவோ, பகுதி இறுதி முன்பணம் பெறவோ பதிவிறக்கம் செய்து வழங்குவர். அதை ஏற்றுக் கொள்ளும்படி, அனைத்துத் துறை அலுவலகங்கள், மாவட்ட கருவூல அலுவலகங்களுக்கு, அரசு செயலாளர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக