லேபிள்கள்

18.3.15

குரூப் 1 அலுவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது.மதுரை வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த மனு: 
டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 1 பணிக்கு தேர்வானவர்களில் (2000--01 பேட்ஜ்) 83 பேரின் தேர்வு செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆவணங்கள்படி 83 பேரில் 14 பேர் பணியை கைவிட்டு, வேறு பணிக்கு சென்றனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிலருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் டி.ஆர்.ஓ.,- ஏ.டி.எஸ்.பி., கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணிபுரிகின்றனர். ஏற்கனவே தேர்வான 83 பேரின் தேர்வு செல்லாது என்ற நிலையில், 14 பேரை எதனடிப்படையில் நியமித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் 65 பேர் சீராய்வு மனு செய்தனர். தற்போதைய நிலை தொடர சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

காத்திருப்போர் பட்டியல், அதில் யார், யாருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை சுப்ரீம் கோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை. 14 பேரும் பணியில் தொடர்வது சட்டவிரோதம். காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் நியமிக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணிபுரியும் ஜானகிராமன், பாலமுருகன், முருகேசனை வழக்கு நிலுவையில் இருக்கும்வரை பணிபுரிய தடை விதிக்க வேண்டும். இவர்களைப் போல் நியமிக்கப்பட்டவர்களின் நியமன உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி பெஞ்ச் தலைமைச் செயலாளர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏப்.,1க்கு ஒத்திவைத்தது. மனுதாரரின் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக