லேபிள்கள்

20.3.15

பத்தாம் வகுப்பு தமிழ் ஆரம்பமே மகிழ்ச்சி : மாணவர்கள் உற்சாகம்

 "பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி" என மாணவர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
 
    மதுரையில் இத்தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:ஜெயப்பிரியா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: வினாக்கள் எளிமையாக இருந்தது. மூன்று திருப்புதல் தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களே அதிகம் கேட்கப்பட்டன. ஆசிரியர்கள் குறிப்பிட்ட, எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றன.

அபிஷேக், வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி, மதுரை: ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் முழுவதும் 'புக்பேக்'கில் இருந்தே கேட்கப்பட்டன. செய்யுள் மனப்பாட பகுதியில் எதிர்பார்த்த திருக்குறள், சிலப்பதிகாரம் பாடல்கள் இடம் பெற்றன. 'சாரா கிரேஸ், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, மதுரை இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடந்த மூன்று தேர்வுகளில் கேட்கப்பட்டவை. எட்டு மதிப்பெண் நெடு வினா பகுதியில் 'ஒழுக்கம் உடமை' என்ற எதிர்பார்த்த வினாவே கேட்கப்பட்டது.

உரைநடை பகுதியில் எளிமையான திரைப்பட கலை பாடத்தில் இருந்தே வினா இடம் பெற்றன. அதிக மதிப்பெண் பெறுவது எளிது.தமிழாசிரியை சுகுமாரி, அரசு உயர்நிலைப் பள்ளி, திருப்பாலை: ஒரு மதிப்பெண், பொருத்துக, விடைக் கேற்ற வினா தேர்வு போன்ற பகுதிகள் எளிமையாக இருந்தன. இயல் 5 மற்றும் 10ல் இருந்து நெடுவினா கேட்கப்பட்டன. இதில் மட்டும் சுமாராக படிக்கும் மாணவர்கள் சற்று சிரமப்படுவர். திருப்புதல் தேர்வுகளில் கேட்ட வினாக்களே அதிகம் இடம் பெற்றன. எளிதில் அதிக மதிப்பெண் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக