தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம், 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.
பறக்கும் படை:
தமிழ் வழியில் படித்த, 7,30,590 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 33,816 பேர் கூடுதலாக, இத்தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 5,200 பேர் கொண்ட, 2,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கட்டுப்பாடுகள்
* முகப்பு சீட்டில், உரிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும்.
* ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை, இருபுறமும் எழுத வேண்டும்.
* விடைக்கு அருகில், வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.
* வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
* நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களால் மட்டுமே, தெளிவாக எழுத வேண்டும்.
* விடைத்தாளில் எழுதாத பக்கங்களில், குறுக்கு கோடிட வேண்டும்.
* வினாத்தாளில் குறியீடு இடக்கூடாது.
* விடைத்தாளில் தேர்வு எண், பெயர் அல்லது வேறு குறியீடு எழுதக் கூடாது.
* வண்ண பேனா, பென்சில், 'ஸ்கெட்ச்' பயன்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக் கூடாது.
* விடைத்தாள் புத்தக தாளை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.
விடைத்தாள்கள் எப்படி?
* தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு, 22 பக்க கோடிட்ட விடைத்தாள் வழங்கப்படும்.
* ஆங்கிலம் இரண்டாம் தாளில், முதல், இரண்டு பக்கங்கள் விளம்பரம் தொடர்பான கேள்விக்காக, கோடிடப்படாமல் இருக்கும்; மற்ற மொழிகளுக்கு, கோடில்லாத விடைத்தாளை பயன்படுத்தக் கூடாது.
* கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, 30 பக்கங்களில் கோடிடப்படாத விடைத்தாள் வழங்கப்படும்.
* கணிதத்துக்கு, 28 மற்றும் 29 பக்க விடைத்தாளில், 'க்ராப் ஷீட்' இணைக்கப்பட்டிருக்கும்.
* சமூக அறிவியலுக்கு, 30 பக்கங்களில், முதலில் நான்கு வரைபடங்கள் இருக்கும், மீதமுள்ள, 26 பக்கங்களில் தேர்வு எழுதலாம்.
* கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்பட்டால் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக