பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16)தொடங்கப்பட உள்ளன.இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருத்துகின்றனர்.
அதன்பிறகு, ஆசிரியர்கள் புதன்கிழமை முதல் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இத் தேர்வை 2,377 மையங்களில் தனித்தேர்வர்கள் 42 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 8.86 லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.பிளஸ் 2 தேர்வு மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, இந்த மையங்களிலிருந்து கணினி மூலம் மதிப்பெண்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மொழிப்பாடங்கள், முக்கியப் பாடங்கள் உள்பட அனைத்துப் பாட விடைத்தாள்களிலும்ரகசிய பார்கோடு எண் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
இதன்மூலம், சம்பந்தப்பட்ட விடைத்தாள் எந்த மாணவருடையது என்பதை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களே கூட அறிந்துகொள்ள முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக