லேபிள்கள்

20.3.15

652 கணினி ஆசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் நீதிபதி உத்தரவு.

652 கணினி ஆசிரியர்கள் நியமனம் ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கணினி ஆசிரியர்பணியிடம்

மதுரை மாவட்டம் தெற்குத்தெரு அருகே உள்ள மருதூரை சேர்ந்தவர் ஷோபனா.இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-நான், கணினி அறிவியலில் முதுகலைப் படிப்பை முடித்து விட்டுபி.எட் படித்துள்ளேன். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அரசுமேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப13.10.2014 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்குவிண்ணப்பிப்பவர்கள் பி.ஈ., பி.சி.ஏ., பி.எஸ்சி(கணினி அறிவியல்),பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பை முடித்துபி.எட்., முடித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2வகுப்புகளுக்கு முதுகலைப் படிப்பை முடித்து பி.எட்., முடித்தவர்கள் மட்டுமேஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும். பி.ஈ., பி.சி.ஏ., பி.எஸ்சி(கணினிஅறிவியல்),பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பைமுடித்து பி.எட்., படித்தவர்களை காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர்பணியிடங்களில் நியமிப்பது நியாயமற்றது. எனவே, கணினி ஆசிரியர் நியமனம் சம்பந்தமான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அந்த அறிவிப்புக்கு தடை விதிக்கவேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் முதுகலை படிப்பை முடித்து பி.எட்.,படித்தவர்களை மட்டுமே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

தேனியை சேர்ந்தவர் மனு

இதேபோன்று மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த எல்.தீபா, தேனிமாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த விஜயலடசுமி ஆகியோரும் மனு தாக்கல் செய்துஇருந்தனர். இவர் களை தவிர பாண்டியராஜன் உள்ளிட்ட 153 பேர் தாக்கல் செய்தமனுவில் கூறி இருப்பதாவது:-நாங்கள் 1999-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்தோம். அந்தசமயத்தில், எம்.எஸ்சி (கம்ப்யூட்டர் அறிவியல்), எம்.எஸ்சி(தகவல்தொழில்நுட்பம்), எம்.சி.ஏ., ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் பி.ஜி.டி.சி.ஏ.படித்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்பின்பு,2008-ம் ஆண்டு 1880பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டோம். அவர்களில், 652 பேர் சில காரணங்களுக்காகபணியில் இருந்து நீக்கப்பட்டனர். 

முன்னுரிமை

அதுபோன்று பணியில் இருந்துநீக்கப்பட்டவர்களில் நாங்களும் அடங்குவோம். இந்த பிரச்சினை சம்பந்தமாகசுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், எங்களில் பி.எட். முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எங்களில் பலர்பட்டப்படிப்பை கணிணி அறிவியல் அல்லாத வேறு பாடத்தில் முடித்து விட்டு பி.எட்.படித்துள்ளனர். அதேவேளையில் முதுகலையில் கணினி அறிவியல் படித்துள்ளனர்.அதுபோன்று, வேறு பாடத்தில் பட்டப்படிப்பை படித்து பி.எட். முடித்து இருந்தாலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு எந்தவித முன்னுரிமையும் வழங்காமல் 652பணியிடங்களையும் நேரடியாக நிரப்ப அரசு முடிவு செய்து இருப்பது நியாயமற்றது.எனவே, அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 652 பணியிடங்களில் எங்களைபோன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்கூறப்பட்டுள்ளது. 

இறுதித் தீர்ப்பே முடிவு

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில்விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில்வக்கீல்கள் டி.லஜபதிராய், லூயிஸ், ஈ.வி.என்.சிவா, அப்பாத்துரை ஆகியோர் ஆஜராகிவாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முருகானந்தம், ‘கணினி ஆசிரியர்பணிக்கு முறைப்படி தான் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதுசான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது‘ என்றார்.மனுவை விசாரித்த நீதிபதி,‘மனுதாரரின் கோரிக்கையை பொறுத்தமட்டில் முழுமையாக விசாரணை நடத்தி தான் முடிவுஎடுக்க முடியும். எனவே, கணினி ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்தவழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும். இறுதி விசாரணைக்கு பின்பு,இந்த நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும்போது சமவாய்ப்பு மறுக்கப்பட்டதாக பணிநியமனம் பெற்றவர்கள் கோர முடியாது‘ என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக