லேபிள்கள்

16.3.15

முதன்முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு திறனாய்வு தேர்வு

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. சென்னை
சேலையூரில் உள்ளசியோன் பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பணியாற் றும் 860க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, அப்பள்ளியின் முதல்வர் டாக்டர் என்.விஜயன் கூறியதாவது:சமச்சீர்கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு கல்வியின் தரம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும், ஆசிரியர்களின் கல்வித் தரமும் குறைந்து விட்டதால் மாணவர்கள் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களின் தகுதியை பரிசோதிப்பதற்காக தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.அதே போல், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் தகுதியை பரிசோதிப்பதற்காக நேற்று திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையில், அவர்களுடைய பாடத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் வல்லு நர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு விஜயன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக