சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள் சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதியை திங்கள்கிழமை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முன்னதாக பள்ளி கல்வித் துறை, கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகங்கள் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாக முற்றுகைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி, "நெட்', "செட்' தகுதித் தேர்வுகள் முடித்த 100 பேருக்கு உதவிப் பேராசிரியர் பணி என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் பார்வையற்ற பட்டதாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இவர்களுடன், அதிகாரிகளும், சமூக நலத் துறை அமைச்சரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாக முற்றுகைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதியை சங்கத்தின் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பகல் 12.15 மணியளவில் சந்தித்துப் பேசினர். அப்போது, கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆணையருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பார்வையற்ற பட்டாதரிகள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கூறியது:
சமூக நலத் துறை அமைச்சரை திங்கள்கிழமை மீண்டும் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முடிவைத் தெரிவிப்பதாக அவர் கூறியிருக்கிறார். எனவே, அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக